×

அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் ராஜகோபுர திருவிழா

திருவொற்றியூர்: மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி 6ம்தேதி ராஜகோபுர ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நேற்று காலை 6 மணிக்கு பால் பணிவிடை, உகபடிப்பு மதியம் பணிவிடை உச்சிபடிப்புடன்  விழா துவங்கியது. முக்கிய நிகழ்வான பால் அன்னம் பொங்கலிடும் நிகழ்ச்சி மாலை நடந்தது. இனிப்பு  உப்பு இல்லாமல் பச்சரிசி, பாசிப் பயறு, தேங்காய் துண்டுகள், ஐந்து காய்ந்த மிளகாய் போன்ற பொருட்கள் கொண்டு, இப்பொங்கல் தயாரிக்கப்படும்.

இதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பால் அன்னம் பொங்கலிட்டு அய்யா வைகுண்ட தர்மபதியை வழிபட்டனர். பின்னர் அய்யா வைகுண்டர் மூலஸ்தானத்தில் இருந்து ஜோதி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பால் அன்னத்திற்கு உலை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை பால் பணிவிடை, உகபடிப்பு முடிந்து, இரவு, அய்யா இந்திர விமானத்தில் பதிவலம் வருதல் நிகழ்வுடன், விழா நிறைவுற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Rajagopuram Festival ,Ayya Vaikunda Dharmapathi Temple ,
× RELATED அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் ராஜகோபுர திருவிழா